இந்திய திரை உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை ஹன்சிகா மோட்வானி குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கி படிப்படியாக வளர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் பல முன்னணி கதாநாயகர்களுடனும் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக தமிழில் நடிகர் அதர்வா கதாநாயகனாக நடித்த 100 படத்தில் நடிகை ஹன்சிகா நடித்திருந்தார். அடுத்ததாக ஹன்சிகா மோத்வானியின் ஐம்பதாவது திரைப்படமாக மஹா திரைப்படம் விரைவில் திரைக்கு வர தயாராகி வருகிறது. முன்னதாக வெளியான மஹா திரைப்படத்தின் டீசர் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்நிலையில் தற்போது ஹன்சிகாவின் அடுத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. உலக சாதனை முயற்சியாக ஒரே ஷாட்டில் படமாக்கப்படும் 105 மினிட்ஸ் எனும் புதிய திரைப்படத்தில் ஹன்சிகா மோட்வானி கதாநாயகியாக நடிக்கிறார்.

இயக்குனர் ராஜு டுஸ்ஸா எழுதி இயக்கும் 105 மினிட்ஸ் திரைப்படத்தை தயாரிப்பாளர் பொம்மக் சிவா தனது ருத்ரன்ஷ் செலுலாய்ட் சார்பில் தயாரிக்கிறார். விக்ரம் வேதா கைதி படங்களின் இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைக்க  கிஷோர் பொயிடபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஒரே ஷாட்டில் படமாக்கப்படும் 105 மினிட்ஸ் திரைப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கும் ஹன்சிகாவின் 105 மினிட்ஸ் படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.