கைபா பிலிம்ஸ் கோ ஸ்டுடியோஸ் மற்றும் நாஸிக் ராவ் மீடியா ஆகிய நிறுவனங்கள்  இணைந்து ஹாலிவுட்டில் தயாரித்துள்ள படம் ட்ராப் சிட்டி. பிராண்டன் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஜிவி பிரகாஷும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ரிக்கி பர்செல் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இன்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. 

gvprakash gvprakash

நிகழ்வில் கலந்துகொண்டு தயாரிப்பாளர் பேசியபோது, இந்தப்படம் எடுப்பதற்கான ஐடியா 2019-ல் வந்தது. ஒரு சவுண்ட் ட்ராக் வேலைக்காகத் தான் ஜிவியைச் சந்தித்தேன். அப்போது தான் அவரை ஹாலிவுட் அழைத்தேன். இப்படத்தில் சர்ஜனாக ஜிவி நடித்துள்ளார்என்று கூறினார். 

trapcity trapcity

படத்தின் ஹீரோ பிராண்டன் ஒரு பெரிய ராப் சிங்கர். அவர் அவரது வறுமை காரணமாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட போலிசாரால் சுடப்படுகிறார். அவருக்கு ட்ரீட்மெண்ட் செய்பவராக ஜீவி வருகிறார். இந்தச் சம்பவம் நடக்கும் போதே பிராண்டன் வெளியிட்ட ஒரு பாடல் பெரிதாக ஹிட் ஆகிறது. இதுதான் படத்தின் கதைக்கரு. தற்போது போஸ்ட் புரொடக்சன் வேலை நடந்து கொண்டிருக்கிறது.