பரியேறும் பெருமாள் எனும் அற்புதமான படைப்பை தந்து சிறந்த இயக்குனராய் மக்கள் மனதில் விளங்குபவர் மாரி செல்வராஜ். தற்போது நடிகர் தனுஷ் வைத்து படம் இயக்கி வருகிறார். தனுஷ் 41 ஆன இந்த படத்தின் டைட்டில் கர்ணன் என பேசப்பட்டு வருகிறது. கலைப்புலி S தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.

dhanush karnan

படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்கிறார். நடிகர் லால், லக்ஷ்மி பிரியா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திருநெல்வேலியில் துவங்கப்பட்டது. ஜனவரி 20-ம் தேதி இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலியில் துவங்கியது. அடுத்த மாதம் வரை நடைபெறவுள்ளது. அத்துடன் பேட்ச் பணிகள் நடைபெறவிருக்கிறது. 

gourigkishan

கையில் கத்தியுடன் இருக்கும் பிரத்தியேக புகைப்படம் சமீபத்தில் வெளியானது. தற்போது நடிகை கௌரி கிஷன் படத்தில் இணைந்துள்ளார். 96 படத்தின் மூலம் திரை ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர், இந்த படத்தில் இணைந்தது கூடுதல் சுவையூட்டிகிறது. இவர் கைவசம் மாஸ்டர் திரைப்படமும் உள்ளது.