நடிகர்கள் நட்டி மற்றும் லால் நடித்துள்ள திரைப்படம் காட்ஃபாதர். அறிமுக இயக்குனர் ஜெகன் ராஜசேகர் இயக்கும் இப்படத்தில் அனன்யா, மாரிமுத்து, குழந்தை நட்சத்திரம் அஷ்வந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஜி.எஸ். ஆர்ட்ஸ் மற்றும் ஃபர்ஸ்ட் கிளாப் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ளன. 

godfather godfather

என். சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்துள்ளார். நவின் ரவீந்திரன் இசையமைத்துள்ளார். சதுரங்க வேட்டை, ரிச்சி, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து நட்டி மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் 21-ம் தேதியான நாளை திரைக்கு வருகிறது. 

godfather

தற்போது படத்தின் முதல் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது. நடிகர் லாலின் வில்லத்தனமான நடிப்பு அசத்தலாக உள்ளது. கேங்ஸ்டர்களிடமிருந்து தன் குடும்பத்தை காப்பாற்றும் ஒருவனின் கதையே இந்த காட்ஃபாதர்.