இந்திய திரையுலகின் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும், ஃபேவரட் ஹீரோவாகவும் வலம் வரும் துல்கர் சல்மான் முதல்முறையாக ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் நடித்துள்ள கன்ஸ் அண்ட் குலாப்ஸ் வெப் சீரிஸ் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக முன்னணி இயக்குனர் பால்கி இயக்கத்தில் த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் CHUP-REVENGE OF THE ARTIST திரைப்படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதனிடையே பிரபல தெலுங்கு இயக்குனர் ஹனு ராகவப்புடி இயக்கத்தில் துல்கர் சல்மான் ராணுவ வீரராக நடித்துள்ள திரைப்படம் சீதா ராமம்.

ஸ்வப்னா சினிமாஸ் தயாரிக்க, வைஜெயந்தி மூவிஸ் வழங்கும் சீதா ராமம் திரைப்படத்தில் துல்கருடன் இணைந்து ம்ரூனல் தாகூர், ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சுமந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சீதா ராமம் படத்திற்கு P.S.வினோத் மற்றும் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரைப்படம் தெலுங்கு, மலையாளம், தமிழ், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் துல்கர் சல்மானின் சீதா ராமம் திரைப்படத்தின் ட்ரைலர் நாளை ஜூலை 25ஆம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

A bigger window into our #SitaRamam world on July 25th 🥰#SitaRamamTrailer @dulQuer @mrunal0801 @hanurpudi @iamRashmika @iSumanth @vennelakishore @TharunBhasckerD @murlisharma72 @bhumikachawlat @Composer_Vishal @VyjayanthiFilms @SwapnaCinema @SonyMusicSouth pic.twitter.com/E4W0OI0owC

— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) July 23, 2022