சூர்யா நடிப்பில் இறுதி சுற்று பட இயக்குனர் சுதா சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று.அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.இந்த படம் 2020 தீபாவளியை முன்னிட்டு அமேசான் ப்ரைம்மில் வெளியானது.

மோகன் பாபு,கருணாஸ்,பூ ராம்,ஊர்வசி உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.GV பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி பெரிய வரவேற்பை இந்த படம் பெற்றது.பல திரைப்பட விழாக்களில் பல அங்கீகாரங்களை இந்த படம் வென்றது.

இந்த படம் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 68ஆவது தேசிய திரைப்பட விருது விழாவில் 5 விருதுகளை அள்ளியது.இதனை தொடர்ந்து சூர்யா-சுதா கொங்கரா விரைவில் ஒரு படத்தில் இணையவுள்ளனர் என்ற தகவல் வெளியாகி வருகிறது.இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த சில தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.அதில் முக்கியமான ஒரு பெயர் முன்னணி மலையாள நடிகர் துல்கர் சல்மான்.சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் சூர்யா சுதா கொங்கரா படத்தில் நடிப்பதாக வெளியான தகவல் வெறும் வதந்தி தான்,நானும் உங்களை போல சமூகவலைத்தளங்களின் மூலம் தான் தெரிந்துகொண்டேன் என தெளிவு படுத்தினார்.

#DulquerSalmaan about #KingOfKotha & #Suriya (Multi-star project) rumors...

© @unnirajendran_ pic.twitter.com/Zw3fXXROmP

— AB George (@AbGeorge_) July 27, 2022