கடந்த 2013-ஆம் ஆண்டு வெளிவந்த மூடர் கூடம் படத்தின் மூலம் இயக்குனராகவும், நடிகராகவும் அறிமுகமானவர் நவீன். இப்படம் சினிமா ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன், இன்றும் நினைவுகூரத்தக்கப் படமாகவும் அமைந்துள்ளது. இதையடுத்து விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் வைத்து அக்னிச் சிறகுகள் படத்தை இயக்கி வருகிறார். 

Naveen

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடையும் இந்த சூழலில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். 

Naveen

இந்நிலையில் இயக்குனர் நவீன் தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்க வேண்டிய வந்தேரி வைரஸ் இன்று பஸ் ஏறி ஊர் ஊராக சென்று கொண்டிருக்கிறது. வந்தேரிகளை விரட்ட வேண்டும் எனும் கொள்கையை இந்த ஒரு விடயத்தில் மட்டும் ஏற்க்கிறேன். நாம் வெளியே வராமல் வீட்டிற்குள்ளிருந்து நடத்தும் போர் இது என தெரிவித்துள்ளார்.