தமிழ் திரையுலகில் தனது அசத்தலான நடிப்பால் பல கோடி ரசிகர்களை தன்வசம் வைத்திருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பட்டாஸ். இவர் கைவசம் ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் திரைப்படத்தில் நடித்துள்ளார். தற்போது அத்ரங்கி ரே படத்தில் நடித்து வருகிறார். 

Dhanush Dhanush

இந்நிலையில் தனுஷ், செல்வராகவன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு விஜயம் செய்துள்ளனர். தனுஷின் சகோதரி கார்த்திகா அவர்களின் குழந்தைக்கு அங்கு மொட்டையிட்டு வேண்டுதலை நிறைவெற்றியுள்ளனர். குழந்தைக்கு மாமன் முறை சடங்கை செய்துள்ளனர் தனுஷ் மற்றும் செல்வராகவன். கையில் கத்தரிக்கோலுடன் குழந்தைக்கு முடி வெட்டுவது போல் உள்ள புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வாருகிறது. 

Selvaraghavan Selvaraghavan Dhanush

மாமாவின் அன்பை பெறுவதில் என் குழந்தைகள் எப்போதும் லக்கி தான். எங்களது மொத்த குடும்பமும்  திருப்பதியில் திவ்விய தரிசனத்தைப் பெற்றோம். என்ன ஒரு நாள் இது... எனது சகோதரர்கள் எப்போதுமே எங்கள் பக்கத்தில் நிற்க தவறுவதில்லை என்று அன்புடன் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் கார்த்திகா.