தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவரது நடிப்பில் தி கிரே மேன் படம் கடைசியாக வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் வி க்ரியேஷன் தயாரிப்பில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம்,வாத்தி,கேப்டன் மில்லர் என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.இந்த படத்தினை மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ளார்.நித்யா மேனன்,ராஷி கண்ணா,ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட மூன்று நாயகிகள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.இயக்குனர் பாரதிராஜா மற்றும் நடிகர் பிரகாஷ்ராஜ் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.இந்த படத்தின் சில பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா நாளை ஜூலை நடைபெறவுள்ளது.தற்போது இந்த படத்தின் தேன்மொழி என்ற பாடல் நாளை வெளியாகும் என்றும் இந்த பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார் என்றும் ஒரு புது போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.

#Thiruchitrambalam’s 4th single 'Thenmozhi' sung by @Music_Santhosh releasing Tomorrow! @dhanushkraja @anirudhofficial #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar @silvastunt @omdop @editor_prasanna @jacki_art @theSreyas pic.twitter.com/XZbF9Kmizi

— Sun Pictures (@sunpictures) July 29, 2022