ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்த சிறந்த நடிகரான தனுஷ் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடித்து வரும் வாத்தி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (ஜூலை 27ம் தேதி) வெளியான நிலையில், தனுஷின் பிறந்தநாளான நாளை (ஜூலை 28) வாத்தி திரைப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படத்தின்  இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
 
இந்த வரிசையில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படத்தின் இயக்குனர்கள் ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் ரியான் கோஸ்லிங், கிரிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோருடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான தி க்ரே மேன் சில தினங்களுக்கு முன்பு ரிலீஸாகி உலகெங்கும் உள்ள ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

பக்காவான அதிரடி ஆக்ஷன் பிளாக் திரைப்படமாக வெளி வந்திருக்கும் தி க்ரே மேன் திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக தி க்ரே மேன் திரைப்படத்தின் 2-ம் பாகம் அடுத்து தயாராகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது .இந்த 2-வது பாகத்தையும் ரூஸோ சகோதரர்கள் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Great news for fans of The Gray Man! 💃🕺

The Gray Man Universe is expanding and a sequel is now in development - starring Ryan Gosling, directed by Joe & Anthony Russo & co-written by Stephen McFeely! pic.twitter.com/iYNomCpARy

— Netflix India (@NetflixIndia) July 26, 2022