இந்திய திரையுலகமே நிமிர்ந்து பார்க்கும் அளவிற்கு தனது கடின உழைப்பால் ஆகச் சிறந்த நடிகராக உயர்ந்து வரும் நடிகர் தனுஷ் இன்று (ஜூலை 28) தனது 38 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.கலாட்டா குழுமம் நடிகர் தனுஷ் அவர்களுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. மேலும் உலகெங்கும் இருக்கும் தனுஷ் ரசிகர்களும் திரை உலக பிரபலங்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது. மேலும் தெலுங்கு தமிழ் என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனுஷ் நடித்துவரும் வாத்தி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியானது. தொடர்ந்து இன்று மாலை வாத்தி திரைப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளது.

வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதி தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.  முன்னதாக ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படத்தின் இயக்குனர்கள் ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தி க்ரே மேன் திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.
 
ரியான் கோஸ்லிங், கிரிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோருடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ள பக்காவான அதிரடி ஆக்ஷன் பிளாக் திரைப்படமாக வெளி வந்திருக்கும் தி க்ரே மேன் திரைப்படத்தின் 2-ம் பாகம் அடுத்து தயாராகவுள்ளதாகவும் 2-வது பாகத்தையும் ரூஸோ சகோதரர்கள் இயக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.

இதனிடையே தற்போது தி க்ரே மேன் திரைப்படத்தின் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்ட மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர். தன் பகுதி படப்பிடிப்பை நிறைவு செய்த தனுஷை படக்குழுவினர் பாராட்டுவதோடு தொடங்கும் அந்த வீடியோவில் நடிகர் தனுஷ் மிரட்டலாக நடித்திருக்கும் ஸ்டண்ட் காட்சிகளின் மேக்கிங் வீடியோ வெளியானது. அந்த வீடியோ இதோ…
 

We also want to give flowers to our sexy Tamil friend 😭❤️
Here's a glimpse of @dhanushkraja behind the scenes of The Gray Man 😍 pic.twitter.com/ie9SGFe5bb

— Netflix India (@NetflixIndia) July 27, 2022