யோகிபாபுவிற்கு தங்க சங்கிலியை பரிசளித்தார் தனுஷ் !
By Sakthi Priyan | Galatta | February 11, 2020 19:18 PM IST

பரியேறும் பெருமாள் எனும் அற்புதமான படைப்பை தந்து சிறந்த இயக்குனராய் மக்கள் மனதில் விளங்குபவர் மாரி செல்வராஜ். தற்போது நடிகர் தனுஷ் வைத்து படம் இயக்கி வருகிறார். தனுஷ் 41 ஆன இந்த படத்தின் டைட்டில் கர்ணன் என பேசப்பட்டு வருகிறது. கலைப்புலி S தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்கிறார். நடிகர் லால், லக்ஷ்மி பிரியா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திருநெல்வேலியில் துவங்கப்பட்டது. ஜனவரி 20-ம் தேதி இரண்டாம் கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலியில் துவங்கியது. அடுத்த மாதம் வரை நடைபெறவுள்ளது. அத்துடன் பேட்ச் பணிகள் நடைபெறவிருக்கிறது.
கையில் கத்தியுடன் இருக்கும் பிரத்தியேக புகைப்படம் வெளியாகி ஈர்த்தது. மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு முடிவடையவிருப்பதாக தகவல் வெளியானது. சமீபத்தில் யோகிபாபுவின் திருமணம் முடிவடைந்தது. கல்யாண பரிசாக யோகிபாபுவிற்கு தங்க சங்கிலியை பரிசளித்தார் தனுஷ்.
Jackie Chan announces huge reward for finding Corona Virus cure!
11/02/2020 07:03 PM
Tollywood Producers Council decides to officially release Box Office reports!
11/02/2020 07:00 PM
Thappad - Trailer 2 | Taapsee Pannu | Anubhav Sinha | Bhushan Kumar
11/02/2020 06:46 PM
Prabhu Deva - Adhik Ravichandran film's first look to release on Feb 14!
11/02/2020 06:32 PM