தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.

இவரது தி கிரே மேன் திரைப்படம் கடைசியாக வெளியாகியுள்ளது.இதனை தொடர்ந்து சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் நானே வருவேன்.வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி தாணு இந்த படத்தினை தயாரித்துளளார்.

யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் இந்துஜா,யோகி பாபு,ஸ்வீடன் நடிகை Elli AvrRam,செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாளை படத்தின் நாயகன் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு அசத்தலான புது போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.தனுஷின் டக்கரான லுக்கில் இருக்கும் இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த போஸ்ட்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்