தென்னிந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே எந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியும் படைக்காத மாபெரும் சாதனை படைத்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியின் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான். திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் சமையல் செய்யும் குக்குகளாகவும் அவர்களுக்கு தொல்லை கொடுக்கும் கோமாளிகளாக நகைச்சுவை கலைஞர்களும் இணைந்து கலக்கலான நிகழ்ச்சியாக வெளிவந்து வெற்றி பெற்றது.
 
கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கோமாளிகள் ஆன புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை என அனைவருக்கும் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அவர்களது வாழ்க்கை பயணம் வெற்றிப்பயணம் ஆனது. குறிப்பாக கவர்ச்சி வேடங்களில் நடித்ததால் கவர்ச்சி கண்ணோட்டத்தில் மட்டுமே மக்கள் பார்த்து வந்த நடிகை ஷகிலாவை, ஷகிலா அம்மா என மக்கள் மனதில் நிறுத்திய பெருமை கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சியை சாரும்.
 
அந்தவகையில் திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகரான இளம் நடிகர் அஸ்வினின் திரைப் பயணத்திற்கும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய பங்காற்றியது. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு அஸ்வினுக்கு தமிழகத்தில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. குறிப்பாக அஸ்வின் மற்றும் சிவாங்கி ஜோடி ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது. 

தொலைக்காட்சி தொடர்களிலும், பல தமிழ்த் திரைப்படங்களில் துணை நடிகராகவும் வலம் வந்த நடிகர் அஸ்வின் தற்போது என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் ஆகிறார். .இயக்குனர் ஹரிஹரன் எழுதி இயக்கும் என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர்கள் விவேக் மற்றும் மெர்வின் இணைந்து இசையமைக்கின்றனர்.


இந்நிலையில் சமீபத்தில் நமது கலாட்டா சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் அவர் கடந்து வந்த பாதையை மிகவும் எமோஷனலாக பகிர்ந்துகொண்டார். ஒரு சிறிய வெற்றியைப் பெறுவதற்கு எத்தனை கடினமான ஏற்ற இறக்கங்களை சந்தித்து தற்போதைய  இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார் என்பதை மிகவும் நெகிழ்ச்சியோடு தெரிவித்திருந்தார். அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.