இயக்குனர் சேரன் நடிப்பில் சாய் ராஜ்குமார் இயக்கியுள்ள படம் ராஜாவுக்கு செக். இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகளில் இருக்கும்போது சேரன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார்.

cheran

சஸ்பென்ஸ் த்ரில்லர் வகை கதையான இதில் சேரன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். யுத்தம் செய், சென்னையில் ஒரு நாள் போன்ற படங்களில் போலீஸாக நடித்த சேரன் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதி டாங்கே, இர்ஃபான், நந்தனா வர்மா ஆகியோரும் நடித்துள்ளனர். 

cheran

வினோத் இசையமைத்து எம்.எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை பல்லாட்டே கோக்கட் பிலிம் ஹவுஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இந்த படம் ஜனவரி 24-ம் தேதி 2020-ல் வெளியாகும் என்ற செய்தி வெளியானது.