பிகில் படத்தின் ரொமான்டிக் பாடல் வீடியோ இதோ !
By Aravind Selvam | Galatta | November 11, 2019 13:24 PM IST

தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படம் தீபாவளியையொட்டி கடந்த 25ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வரும் இந்த படத்தின் ரொமான்டிக் பாடலான உனக்காக என்ற பாடலின் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.விஜய் மற்றும் நயன்தாராவின் அழகான கெமிஸ்ட்ரியில் உருவாகியுள்ள இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்