ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி விருந்தாய் வெளியாகியுள்ள படம் பிகில். இந்தப் படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். விமர்சன ரீதியாகக் கலவையாகவே உள்ளது. இதனைத் தொடர்ந்து பிகில் படக்குழுவினருக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரிலீஸான மூன்று நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 100 கோடி வசூலித்தது.

bigil

ரூ. 180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட பிகில் வெளிநாடுகளில் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. பிகில் ரிலீஸான நான்கு நாட்களில் ரூ. 152 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.

vijay

அக்டோபர் 30-ம் தேதி எகிப்து நாட்டில் பிகில் திரைப்படம் வெளியாகவுள்ளது. அதுமட்டுமல்லாமல் எகிப்து நாட்டில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்ற பெருமையையும் பிகில் பெற்றுள்ளது. நாளுக்கு நாள் வசூலில் சாதனை படைத்து வரும் பிகில் திரைப்படம் மென்மேலும் வெற்றிகளை பெற கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.