விஜய் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிகில்.ஏ.ஜி.எஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.விஜய் இரட்டை வேடங்களில் வயதான கெட்டப் உடன் இந்த படத்தில் நடித்திருந்தார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக்கே ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார்.கதிர்,விவேக்,யோகி பாபு,இந்துஜா,அமிர்தா ஐயர்,இந்திரஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருந்தார்.ரூபன் இந்த படத்தின் எடிட்டிங் வேலைகளை செய்து வந்தார்.இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த இந்த படம் பட்டிதொட்டி எங்கும் உள்ள ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று 300 கோடிகளை வசூல் செய்தது.கடந்த வருடத்தின் அதிகம் வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றிருந்தது பிகில்.இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் இந்திரஜா ஷங்கர்,பிரபல காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகளான இவரது நடிப்பு பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த முக்கிய நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்.இதுவரை நடந்து முடிந்த மூன்று சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு, நல்ல TRPயையும் பெற்றிருந்தது.இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எப்போதும் பிக்பாஸ் தொடரில் Wildcard முறையில் சில போட்டியாளர்கள் போட்டி ஆரம்பித்து சில நாட்கள் கழித்து வீட்டிற்குள் நுழைவார்கள்,அப்படி சீசன் 4-ல் ஏற்கனவே அர்ச்சனா மற்றும் சுசித்ரா இருவரும் நுழைந்துள்ளனர்.இந்நிலையில் இந்திரஜா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

 இதனை வைத்து இந்திரஜா ஷங்கரும் பிக்பாஸ் தொடரில் பங்கேற்க போகிறார் இதற்காக பழைய போட்டியாளர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்ற செய்திகள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இது குறித்து இந்திரஜாவுக்கு நெருங்கிய வட்டாரங்களில் விசாரித்த போது தெலுங்கில் ஒரு ஷூட்டிங்கிற்காக சென்றுள்ள இந்திரஜா அந்த ஹோட்டலில் தங்கியுள்ளார் என்று தெளிவுபடுத்தினர்.