பிக்பாஸ் சீசன் 3 தொடரின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களில் இடம்பிடித்தவர் கவின்.பிக்பாஸ் தொடருக்கு முன் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்திருந்தார்.சில நிகழ்ச்சிகளிலும்,விருது விழாக்களிலும் தொகுப்பாளராகவும் இருந்திருந்தார்.

Biggboss Kavin Picture Clicked By Sivakarthikeyan

சத்ரியன்,நட்புனா என்னன்னு தெரியுமா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருந்தார்.பிக்பாஸ் தொடரில் இருந்து வெளியே வந்த பின் இவருக்கு பட வாய்ப்புகள் ஏராளமாக வந்துள்ளன என்றாலும் இன்னும் அவர் எதிலும் கமிட் ஆகவில்லை.

Biggboss Kavin Picture Clicked By Sivakarthikeyan

இவர் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தனது நெருங்கிய நண்பர்களான நெல்சன் மற்றும் சிவகார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வந்த படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார்.அப்போது சிவகார்த்திகேயன் எடுத்த புகைப்படம் ஒன்றை கவின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

📷 - @sivakarthikeyan nae.. 🤗❤️

A post shared by Kavin M (@kavin.0431) on