முன்னணி செய்தி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த தன் கரீயரை தொடங்கினார் அனிதா சம்பத். தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 4-ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

தமிழ் சினிமாவிலும் தற்போது நடித்து வரும் அனிதா சம்பத் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கிடைத்த வரவேற்பையடுத்து சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். குறிப்பாக விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிகளிலும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் தற்போது முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கலர்ஸ் கன்னடா தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட்டான மங்கள கௌரி மதுவே என்னும் மெகா தொடரின் தமிழ் ரீமேக்காக  கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மெகா தொடர் சில்லுனு ஒரு காதல்.

நடிகர் சமிர் அஹமது மற்றும் தர்ஷினி கௌடா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இத்தொடரில் அனிதா சம்பத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிதா சம்பத்தை அறிமுகப்படுத்தும் தற்போது புதிய புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. சில்லுனு ஒரு காதல் மெகா தொடரின் இந்த புதிய புரோமோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.