பாரதி கண்ணம்மா தொடர் படைத்த இமாலய சாதனை !
By Aravind Selvam | Galatta | May 12, 2021 17:21 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.2019 பிப்ரவரியில் இருந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.ரோஷினி ஹரிப்ரியன் இந்த தொடரின் நாயகியாக நடித்துள்ளார்.அருண் பிரசாத் இந்த தொடரில் ஹீரோவாக நடித்துள்ளார்.ரூபா ஸ்ரீ,அகில்,கண்மணி மனோகரன்,காவ்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த தொடர் விஜய் டிவியின் TRPயை அல்லும் முக்கிய தொடர்களில் ஒன்று.கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட இந்த தொடர் மீண்டும் தொடங்கி பல விறுவிறுப்பான திருப்பாங்களோடு TRP-யில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.இந்த தொடரை வைத்து குறிப்பாக கண்ணம்மா நடப்பது செம வைரலாக இருந்தது.
இந்த தொடருக்கான மவுசு குறையாமல் தொடர்ந்து TRP-யில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்து அசத்தி வந்தது.இந்த தொடரில் நடித்து வரும் பல நட்சத்திரங்களும் இந்த தொடரின் மூலம் பிரபலன்களாக மாறிவிட்டனர்.இந்த தொடரின் புதிய எபிசோடுகள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள இந்த தொடர் தற்போது 500 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்து அசத்தல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.இதனை இந்த தொடரின் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
Shaktimaan actor Mukesh Khanna quashes death rumours; addresses fans in video
12/05/2021 09:46 PM
Sivakumar, Suriya and Karthi donate Rs 1 crore to CM's COVID-19 relief fund
12/05/2021 07:43 PM
Vijay Sethupathi Movie - New Trailer | Film releasing this Friday!
12/05/2021 06:08 PM