இணையத்தில் வைரலாகும் சீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோஷூட் !
By Aravind Selvam | Galatta | July 30, 2021 18:32 PM IST
பிரபல தொகுப்பாளராக தனது மீடியா வாழ்க்கையை தொடங்கி பின்னர் பல முன்னணி சேனல்களின் சீரியல்களில் பணிபுரிந்து அசத்தியவர் ஃபரீனா.சில சூப்பர்ஹிட் சீரியல்களில் சின்ன வேடங்களில் நடித்த இவர் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையும் பெற்றிருந்தார்.
இந்த தொடரில் முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் ஃபரீனா அசாத் நடித்து வருகிறார்,இந்த கதாபாத்திரத்தில் நடித்து சில விருதுகளையும் வென்று அசத்தினார்.வெண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வரும் இவர் இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருப்பார்.
2017-ல் Rahman Ubaidh என்பவரை திருமணம் செய்துகொண்டார்,இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் நேற்று கர்பமாக இருப்பதை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார் ஃபரீனா.இவருக்கு பல ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆறு மாத கர்பமாக இருக்கும் ஃபரீனா இதற்காக 4 வருடம் காத்திருந்தாக பதிவிட்டிருந்தார்.தற்போது கர்பகமாக இருப்பதுடன் பட்டுபுடவையுடன் ஒரு போட்டோஷூட் ஒன்றை பதிவிட்டுள்ளார் ஃபரீனா.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம ட்ரெண்ட் அடித்து வருகிறது.