2009-ல் ஜேம்ஸ் காமரூன் இயக்கத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்த படம் அவதார்.10 வருடங்கள் கடந்தும் உலகின் அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையை தக்கவைத்து வருகிறது.இந்த படத்தின் அதீத வெற்றியை தொடர்ந்து அதன் அடுத்த பாகங்களை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

Avatar 2 avtr teaser Mercedez Benz James Cameron

அவதார் படத்தின் இரண்டு,மூன்று மற்றும் நான்காம் பாகங்கள் தயாராகி வருகின்றன என்றும் இரண்டாம் பாகம் 2020 டிசம்பரில் வெளியாகும் என்று தெரிவித்திருந்தனர்.மூன்று மற்றும் நான்காம் பாகம் 2022 மற்றும் 2023-ல் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

Avatar 2 avtr teaser Mercedez Benz James Cameron

இந்த படம் டிசம்பர் 17ஆம் தேதி 2021-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் சில புகைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.தற்போது பென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு கான்சப்ட் காரை வெளியிடவுள்ளனர்.இதற்கான முன்னோட்டத்தை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.