தடம், சாஹோ படங்களை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் மாஃபியா. துருவங்கள் பதினாறு மற்றும் நரகாசுரன் படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

arunvijay

த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். நடிகர் பிரசன்னா வில்லனாக நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார்.

arunvijay

arunvijay

இதில் அருண் விஜய்யும், பிரச்சன்னாவும் ஜெயிக்கப்போவது சிங்கத்தோட பலமா? நரியோட தந்திரமா? என்ற வசனம் ரசிகர்களை ஈர்த்தது. இந்த படம் டிசம்பர் 5-ம் தேதி ரிலீஸாகும் என்ற தகவல் நெருங்கிய திரை வட்டாரம் மூலம் தெரியவந்தது. தற்போது படத்திற்கான டப்பிங் பணிகளை முடித்துவிட்டதாக அருண்விஜய் பதிவு செய்துள்ளார்.