தமிழ் சினிமாவில் வித்தியாசமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து அசத்தும் நடிகர் அருண் விஜய். இவர் சினிமாவில் நுழைந்து இன்றோடு 25 வருடம் நிறைவடைந்தது. தனது செகண்ட் இன்னிங்ஸில் தொட்டதெல்லாம் வெற்றியாக இவருக்கு அமைந்து வருகிறது. மகிழ் திருமேனி இயக்கிய தடம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

arunvijay

இதனை தொடர்நது துருவங்கள் பதினாறு புகழ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிய மாஃபியா படத்தில் நடித்துள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். பிரியா பவானி ஷங்கர் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.பிரசன்னா இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

arunvijay arunvijay

இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் வரும் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் வேடன் வந்தாச்சோ பாடல் வெளியாகி பட்டையை கிளப்பியது. படத்தின் ரன்டைம் 112 நிமிடங்கள் என தெரியவந்தது. 1 மணி நேரம் 52 நிமிடம் இருப்பதால் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது.