தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

Archana Kalpathi on Vijay Bigil Audio Launch Date

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Archana Kalpathi on Vijay Bigil Audio Launch Date

இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.இது வியாழக்கிழமை என்பதால் ஏன் இந்த தேதியில் நிகழ்ச்சியை நடத்துகிறீர்கள் என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.தற்போது இதற்கு படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி விளக்கமளித்துள்ளார்.

Archana Kalpathi on Vijay Bigil Audio Launch Date

இந்த இசைவெளியீட்டு விழா எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு நிகழ்ச்சி படத்தில் நடித்த,வேலைபார்த்த அனைவரும் தவறாமல் இந்த விழாவில் கலந்துகொண்டு கொண்டாட வேண்டும் என்பதற்காக இந்த விழாவை செப்டம்பர் 19ஆம் தேதி வைக்கவேண்டியதாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

Archana Kalpathi on Vijay Bigil Audio Launch Date

இந்த தேதி வாரநாட்களில் வருவதால் இந்த விழாவை லைவ் டெலிகாஸ்ட் செய்ய முடியவில்லை ஆதலால் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா செப்டம்பர் 22ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Archana Kalpathi on Vijay Bigil Audio Launch Date