காஞ்சனா படத்திற்கு பிறகு திரை ரசிகர்களிடையே திகில் படங்களுக்கென வரவேற்பு அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் சுந்தர்.சி அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களை இயக்கினார். நகைச்சுவை திரைப்படம் இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட்டாக இருந்தவர், திகில் படங்களையும் இயக்கி அசத்தினார்.

arya

தற்போது அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார். அவ்னி சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, சாக்ஷி அகர்வால், விவேக் முக்கிய ரோலில் ரோலில் நடிக்கின்றனர். சத்யா இசையமைக்கிறார். 

manobala

raashikhanna manobala

இந்நிலையில் அரண்மனை-3 படத்தின் படப்பிடிப்பு குஜராத் அருகே ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. ராஜ்கோட்டில் அமைந்துள்ள பிரம்மாண்ட அரண்மனையை தேர்ந்தெடுத்து, படப்பிடிப்பை நடத்தி வருகிறார் சுந்தர்.சி.