கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட்டு படமாகிறது இதை மணிரத்னம் இயக்குகிறார். கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், ஐஸ்வர்யாராய் ஆகியோர் நடிக்க உள்ளனர் என்ற தகவல் தெரியவந்தது. இவர்களுடன் ஜெயராம் , லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில்  நடிக்கவுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ள இந்த படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். 

ponniyinselvan

தாய்லாந்தில் உள்ள வனப்பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. அதிகாலை மூன்று மணிக்கே ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு விரைந்தனர் படக்குழுவினர். பாகுபலி போல் இரண்டு பாகங்களாக உருவாகவிருக்கும் இப்படத்தில் பன்னிரண்டு பாடல்கள் இருக்கக்கூடும் என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்தார். 

ponniyinselvan arrahman

இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ஈர்த்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த படைப்பிற்காக மிகுந்த ஆவலில் காத்திருக்கின்றனர் திரை விரும்பிகள். படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தாய்லாந்தில் நிறைவடைந்தது. சென்னை பாண்டிச்சேரியில் உள்ள கடற்கரை பகுதியில் கலை இயக்குனர் தோட்டா தரணி கொண்ட குழுவினர் ஒத்திகை பார்த்து வருகின்றனர். விரைவில் படக்குழு இலங்கை செல்லுக்கூடும் என்று கூறப்படுகிறது. ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்திலிருந்து பிரத்தியேக புகைப்படங்களை காண்பித்ததாக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு செய்துள்ளார்.