ஹலீதா ஷமீம் இயக்கத்தில் நடிகர் சமுத்திரகனி மற்றும் சுனைனா நடிக்கும் படம் சில்லுகருப்பட்டி. பூவரசம் பீ பீ எனும் படத்தை இயக்கிய ஹலீதாவின் இரண்டாம் படம் இது. இப்படத்தில் சாரா அர்ஜுன், நிவேதிதா சதீஷ், மணிகண்டன் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தில் ஓகே கண்மணி பட புகழ் லீலா சாம்சன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். 

sillukarupatti

சுவாரஸ்யம் என்னவென்றால், படத்திற்கு நான்கு ஒளிப்பதிவாளர்கள் பணியாற்றிருக்கிறார்கள். மனோஜ் பரமஹம்சா, அபிநந்தன் ராமானுஜன், யாமினி மூர்த்தி, விஜய் கார்த்திக் ஆகியோர் தங்களது திறமையை வெளிப்படுத்தியிருக்கின்றனர். படத்திற்கு பிரதீப் குமார் இசையமைக்கிறார். சில்லுகருப்பட்டி படத்தின் திரையரங்க உரிமையை சூர்யாவின் 2டி நிறுவனம் கைப்பற்றியது. 

armurugadoss

armurugadoss

சென்னை இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் சிறந்த படங்களுக்கான தரவரிசையில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது இப்படம். தற்போது இயக்குனர் முருகதாஸ் சில்லுக்கருப்பட்டி படம் அற்புதமாக இருப்பதாக கேள்விப்பட்டுள்ளாராம். மேலும் அவரது வாழ்த்துக்களை பதிவு செய்தார்.