தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படம் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது..இதனை தொடர்ந்து இவர் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்னாத்துடன் ஒரு படத்தில் இணைகிறார்.

Ananya Pandey Pairs Opposite Vijay Devarakonda

இந்த படத்தினை பூரி ஜெகன்நாத்,சார்மீ,கரண் ஜோகர் உள்ளிட்டோர் தயாரிக்கின்றனர்.இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன்,ரோனித் ராய் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்திற்கு ஃபைட்டர் என்று பெயரிட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Ananya Pandey Pairs Opposite Vijay Devarakonda

இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் அனன்யா பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.