ஆடை படத்தின் வெற்றியை அடுத்து அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள படம் அதோ அந்த பறவை போல.அறிமுக இயக்குனர் வினோத்.கே.ஆர் இந்த படத்தை இயக்குகிறார்.செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

Amala Paul Sexual Abuse Case Investigation On Hold

ஜேக்ஸ் bejoy இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.லிப்ரா ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகின்றனர்.இந்த படம் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து பாலிவுட் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

Amala Paul Sexual Abuse Case Investigation On Hold

கடந்த வருடம் தன்னிடம் ஆபாசமாக பேசியதாக சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் என்பவர் மீதும் பாஸ்கர் என்பவர் மீதும் மாம்பலம் காவல்நிலையத்தில் புகைரளித்திருந்தார்.இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

Amala Paul Sexual Abuse Case Investigation On Hold

அமலா பால் தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும் பாஸ்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.மேலும் இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.

Amala Paul Sexual Abuse Case Investigation On Hold