கடந்த 2011-ம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான படம் மங்காத்தா. அஜித்தின் 50-வது படமான இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான பாடல்கள் மற்றும் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக இருந்தன. 

ajith

இந்த படத்தின் போது இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிற்கு நன்றி கூறி ஆட்டோகிராஃப் செய்து தந்திருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. டியர் யுவன் தீனா, பில்லா இப்போது மங்காத்தா போன்ற படங்களுக்கு இசையமைத்ததற்கு நன்றி என எழுதியுள்ளார். அதன் பிறகு அஜித்-யுவன் காம்போவில் ஆரம்பம், நேர்கொண்ட பார்வை போன்ற படங்கள் வெளியானது. 

ajith

தற்போது H.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைப்பாளர். போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.