தமிழ்,தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.தமிழில் கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் தயாராகியிருந்த NGK படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.சில ஹிந்தி படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார் ரகுல்.

இதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதனை தொடர்ந்து ஹிந்தி,தெலுங்கு உள்ளிட்ட முன்னணி மொழிகளில் முக்கிய படங்களில் நடித்து அசத்தி வருகிறார் ரகுல் ப்ரீத்.கொரோனா பாதிக்கப்பட்டு அதிலிருந்தும் மீண்டு ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கையை கொடுத்தார் ரகுல் ப்ரீத்.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் ரகுல் தனது புகைப்படங்கள், வீடியோக்கள் என்று ஏதேனும் ஒன்றை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்

தற்போது இவர் நடித்துள்ள Mashooka என்ற மியூசிக் வீடியோ வெளியாகியுள்ளது.ரகுலின் துள்ளலான நடன அசைவுகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் அடித்து வரும் இந்த வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்