தமிழ் திரையுலகின் சின்ன கலைவானர் என்று அழைக்கப்படுபவர் நடிகர் விவேக். காமெடி ரோல் மட்டுமல்லாது எந்த ஒரு பாத்திரம் தந்தாலும் அதை ஏற்று நடிக்கக்கூடிய திறனை பெற்றவர். இதில் என்ன சந்தேகம், இயக்குனர் சிகரம் KB கண்டெடுத்த பொக்கிஷங்களில் இவரும் ஒருவர். சிறந்த நடிகன் என்பதை கடந்து சீரான சமூக பணிகள் செய்து வரும் மனிதன்.

vivek

சுற்றுசூழலை பாதுகாக்க மரம் நட வேண்டும் எனும் நம்பிக்கை விதையை ஜனங்கள் மனதில் விதைத்த பெருமை ஜனங்களின் கலைஞன் விவேக்கையே சேரும். இவரது நடிப்பில் வெள்ளை பூக்கள் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது. பிகில் படத்தில் தளபதி விஜயுடன் சேர்ந்து நடிக்கிறார். மேலும் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 திரைப்படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

vivek

vivek

தற்போது ட்விட்டரில், #plantforkalam என்ற ஹாஷ்ட்டாகை ட்ரெண்ட் செய்யலாமா ?என்று பதிவு செய்துள்ளார். விவேக்கின் இச்செயல் பாராட்டிற்குரியது.