தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 64. இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

thalapathy64

டெல்லி கல்லூரியில் நடந்த படப்பிடிப்பில் VJ ரம்யா, 96 புகழ் கௌரி கிஷன், இணையதள புகழ் பிரிகிடா போன்றோர் நடித்தனர். ஷிவமோகாவில் நடக்கும் படப்பிடிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கலந்து கொண்டார் என்ற தகவல் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் விஜய்சேதுபதி அரசியல் வாதியாக நடிக்கிறார் என்ற தகவலும் கிடைத்தது. 

lallu

lallu

தற்போது நடிகர் லல்லு படப்பிடிப்பில் இணைந்துள்ளார் என்ற செய்தி தெரியவந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் முக்கிய பாத்திரத்தில் இவர் நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல். தளபதி விஜய்யுடன் சர்க்கார் படத்திலும் இவர் நடித்திருந்தார். 2020 ஏப்ரல் மாதத்தில் இப்படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.