தமிழ் சினிமாவின் ஆக சிறந்த நடிகராக வளர்ந்து நிற்கும் நடிகர் தனுஷ் படத்திற்கு படம் தனது நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்து வருகிறார். வித்தியாசமான கதை களம் கொண்ட திரைப்படங்கள் வித்தியாசமான கதாபாத்திரங்கள் என ஏற்று நடித்து தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை ஒவ்வொரு படத்திலும் நிரூபித்து வருகிறார்.

கடைசியாக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தில் கொடியன்குளம் கிராமத்து இளைஞராக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினருக்கு குரல் கொடுக்கும் கர்ணனாக ரசிகர்களை கலங்க வைத்த தனுஷ், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவந்த ஜகமே தந்திரம் திரைப்படத்தில் சுருளி கதாபாத்திரத்தில் சேட்டை செய்யும் கேங்ஸட்டராகவும் கலக்கியிருந்தார்.

அடுத்ததாக தற்போது D43 எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழில் துருவங்கள் பதினாறு மற்றும் மாஃபியா உள்ளிட்ட படங்களை இயக்கிய இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். இயக்குநர் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் இசையமைக்க சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.
 
ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வரும் D43 படபிடிப்பிலிருந்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. D43 படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருவதாக தற்போது தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. இதுகுறித்து புத்தம் புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. 

அடுத்ததாக நடிகர் தனுஷ்  பாலிவுட்டில் அக்ஷய் குமாருடன் இணைந்து இயக்குனர் ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் அற்றங்கி ரே மற்றும் ஹாலிவுட்டில் நடிகர் கிரிஸ் எவன்ஸ் உடன் இணைந்து அவெஞ்சர்ஸ் ENDGAME இயக்குனர்களான ரூஸோ சகோதரர்களின் தி கிரே மேன் திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.