தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த நடிகர் முரளியின் மகனான நடிகர் அதர்வா, பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பிறகு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்து தேசிய வருது பெற்ற பரதேசி திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.

தொடர்ந்து இரும்புக்குதிரை, சண்டிவீரன், ஈட்டி, கணிதன் என பல தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் அதர்வா, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் இணைந்து நடித்து இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த இமைக்கா நொடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. 

கடைசியாக ஜிகர்தண்டா திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவான கட்டள கொண்டா கணேஷ் திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ் உடன் இணைந்து நடித்திருந்தார்.அடுத்ததாக நடிகர் அதர்வாவின் நடிப்பில் தள்ளிப்போகாதே, குருதி ஆட்டம் ஆகிய திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

இந்நிலையில் தற்போது நடிகர் அதர்வாவின் புதிய திரைப்படமாக அட்ரஸ் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது. நடிகர் அதர்வா மற்றும் கோலிசோடா 2 பட கதாநாயகன் இசக்கி பாரத் இணைந்து நடித்துள்ள அட்ரஸ் திரைப்படத்தை இயக்குனர் ராஜா மோகன் இயக்கியுள்ளார். 

இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள அட்ரஸ் திரைப்படத்தை தயாரிப்பாளர் அஜய் கிருஷ்ணா தயாரித்துள்ளார். மலை கிராமத்தில் வசிக்கும் மக்களின் சிரமங்களை குறித்துப் பேசும் வகையில் அமைந்திருக்கும் அட்ரஸ் திரைப்படத்தின் டீசர் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது.