உலகின் மிகவும் பிரம்மாண்டமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான சர்வைவர் நிகழ்ச்சி தற்போது தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது. முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தமிழ் தொலைக்காட்சி சர்வைவர் நிகழ்ச்சியை தமிழ் ரசிகர்களுக்காக வழங்குகிறது. முதல் முறையாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.

கிட்டத்தட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி போல் போட்டியாளர்களை ஒரு சிறிய தீவில் திறந்த வெளியில் விட்டு விட்டு உணவு, இருப்பிடம் என அவர்களுக்கு தேவையான அனைத்தையும் அந்த தீவில் அவர்களே தயார் செய்து கொள்வது மற்றும் போட்டிக்கான டாஸ்க்குக்கள் நிறைந்ததே இந்த சர்வைவர் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் போட்டியாளர்களாக ஜான் விஜய், நந்தா, வனிதா விஜயகுமார், விஜயலக்ஷ்மி, வித்யூலேகா, ஷாலு ஷம்மு, ஸ்ரீ ரெட்டி, இந்திரஜா சங்கர் (ரோபோ சங்கரின் மகள்), சஞ்சனா சிங், VJ பார்வதி என பலரது பெயர்கள் பேசப்படும் நிலையில் சில தினங்களுக்கு முன் நடிகை விஜயலக்ஷ்மி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் வீடியோ ஒன்று வெளியாகி இன்னும் பரபரப்பைக் கூட்டியது.

இந்நிலையில் வருகிற ஞாயிற்றுக்கிழமை இந்நிகழ்ச்சியின் முக்கிய ப்ரோமோ ஒன்று வெளியாகிறது. அந்த ப்ரோமோவில் சர்வைவர் நிகழ்ச்சி ஆரம்பமாகும் தேதி குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அறிவிக்கும் விதமாக தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த அதிரடியான ப்ரோமோ இதோ..