கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் சேது. வாலிப ராஜா, 50/50 போன்ற சில படங்களிலும் நடித்திருந்தார் சேது. சிறந்த நடிகரான இவர் சீரான மருத்துவரும் கூட. புகழ்பெற்ற தோல் மருத்துவரான இவர் நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக காலமானர். இச்செய்தி ரசிகர்கள் அல்லாது பல திரைப்பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியது. 

RipDoctorSethu

இச்செய்தி அறிந்த பிக்பாஸ் பிரபலமான அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், இது என் இதயத்தை நொறுக்குகிறது. கடவுளுக்கு இரக்கம் இல்லையா ? வாழ்க்கை நிலையற்றது என்பது தெரியும் ஆனாலும் இது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அவர் ஒரு மருத்துவர் மட்டும் இல்லை. எனது நம்ப தகுந்த நண்பரும் கூட. உங்கள் ஆன்மா சாந்தி அடையட்டும் என் நண்பரே என பதிவு செய்துள்ளார். 

Sethuraman abiramivenkatachalam

இரண்டு நாட்களுக்கு முன் கூட கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோக்கள் வெளியிட்டார். இந்த மாதிரி நேரத்தில் உணவு முறை குறித்தும் மக்களுடன் பகிர்ந்தார் சேது. இப்படியிருக்கையில் இவரது இழப்பு பலரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.