ஜீவா கொரில்லா படத்தின் ரிலீஸை அடுத்து தனது முதல் பாலிவுட் படத்தில் நடித்து வந்தார்.1983-ல் உலகக்கோப்பை வென்ற கிரிக்கெட் அணியை பற்றி உருவாகிறது.இந்த படத்தில் தமிழக வீரர் கிறிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா நடிக்கிறார்.

83 The Film First Look Launch Chennai Ranveer Jiiva

ரன்வீர் சிங் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை கபீர் சிங் இயக்குகிறார்.இந்த படம் ஏப்ரல் 10ஆம் தேதி 2020 வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் தமிழ் திரையரங்க உரிமையை உலகநாயகன் கமல்ஹாசன்,ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.

83 The Film First Look Launch Chennai Ranveer Jiiva

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.இந்த விழாவில் முக்கிய படக்குழுவினர் கலந்துகொண்டனர் மேலும் கிரிக்கெட் வீரர்கள் கபில் தேவ் மற்றும் ஸ்ரீகாந்தும் விழாவில் கலந்துகொண்டனர்.

83 The Film First Look Launch Chennai Ranveer Jiiva

விழாவில் பேசிய கமல்ஹாசன் இந்த படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்வதில் மிகவும் மகிழ்ச்சி என்று கூறினார்.1983-ல் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி தான் உண்மையான அவெஞ்சர்ஸ் என்று தெரிவித்தார்.மேலும் தனது பஞ்சதந்திரம் படத்தில் ஸ்ரீகாந்தை நடிக்கவைக்க முயற்சித்ததாகவும் அவர் தெரிவித்தார்

அடுத்ததாக பேசிய படத்தின் நாயகன் ரன்வீர் சிங் இந்த படம் மிகவும் முக்கியமான படம் என்று கூறினார்.ஷூட்டிங்கில் நடைபெற்ற சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.பின்னர் ஜீவாவுடன் இணைந்து மேடையிலேயே கமலின் அக்மார்க் டான்ஸ் ஸ்டெப் ஒன்றை செய்து காட்டினார்.

பின்னர் பேசிய ஜீவா இந்த படத்தில் நடிக்க மிகவும் பயந்ததாகவும் தன்னால் ஷூட்டிங்கில் நடந்த சில சிக்கல்களையும் தெரிவித்தார்.ஸ்ரீகாந்த்திடம் உங்களை போல் எப்படி விளையாடுவது என்று கேட்டதையும் அதற்கு ஸ்ரீகாந்தின் நகைச்சுவையான பதிலையும் தெரிவித்தார்.