கொரோனா பீதியால், உலகமே ஒரு பக்கம் முடங்கி உள்ள நிலையில், இன்னொரு பக்கம் சுய இன்பம் அதிகரித்து, செக்ஸ் கருவி விற்பனைகள் படு ஜோராக விற்பனையாகி வருகிறது.

உலகமே கொரோனா பீதியால் வீட்டிற்குள் முடங்கி உள்ளது. இதனால் கணவன் - மனைவி அதிக நேரம் ஒரே இடத்தில், இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 

sex toys sale surge because of corona virus

இதனால், கணவன் - மனைவி இருவருமே உடல் மொழியின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, சிலர் செக்ஸ் பொம்மை மற்றும் செக்ஸ் சாதனங்களை வாங்கி சுய இன்பத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இன்னும் சிலர், தங்களது தாம்பத்திய இன்பம் இன்னும் சிறப்பாக அமையும் வகையில், இந்த செக்ஸ் கருவிகளை வாங்கி பயன்படுத்தி, இன்னும் உற்சாகமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக, செக்ஸ் கருவிகளின் விற்பனை இதுவரை இல்லாத அளவுக்குப் படு ஜோராக விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக, அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக அமெரிக்கர்கள் இத்தாலியர்கள், கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் தான், பாலியல் சாதனங்களை அதிக அளவில் வாங்கி பயன்படுத்துகிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

sex toys sale surge because of corona virus

“பலரும் கொரோனா பீதியால் தன்னுடைய இணையுடன் செக்ஸ் உறவைத் தொடராமல், அதை விடவும் முடியாமல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும் முடியாமல், இந்த பாலியல் சாதனங்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள் என்றும், இதனால் உலக அளவில் அதன் விற்பனை, இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து அதிகரித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

மேலும், பாலியல் சாதனங்களைக் குறைந்தது 49 US டாலர் முதல், அதிக பட்சமாக 199 US டாலர் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. தற்போது, முந்தைய விற்பனையை விட, கடந்த 3 மாதங்களில் சுமார் 50 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளதாகவும், பாலியல் சாதனங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக, ஜனவரி முதல் நாள் முதல், தற்போது மார்ச் 6 ஆம் தேதி வரைக்குள் அதிக பட்சமாக இத்தாலியில் சுமார் 60 சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் இங்கிலாந்தில் பாலியல் சாதனங்கள் எந்த அளவுக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற புள்ளி விபரங்கள் கிடைக்கில்லை என்றும், ஆனால், கடந்த பிப்ரவரி மாதத்தில் வழக்கத்தை விட சுமார் 13 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல், ஹாங்காங்கில் முன்பைவிட சுமார் 71 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சீனாவில் யோகா பாய்கள் மற்றும் வீடியோ கேம்களை முறியடிக்கும் வகையில், கடந்த மாதம் ஆணுறைகளை வழக்கத்தை விட மிக அதிகமாக வாங்கி உள்ளார்கள் என்பதும் தெரியவந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் இன்பத்துக்கு ஏங்கி கிடக்கு!