அத்தையுடன் தினமும் உல்லாசம் அனுபவித்து வந்த மருமகனை, மாமன் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த நம்பிராஜன், மருதம்புத்தூரைச் சேர்ந்த தனது மாமா ஆதிமூலம் வீட்டில் தங்கி, அவருக்கு உதவியாக வேலை செய்து வந்தார்.

illegal contact

ஆதிமூலம் தனது மனைவியுடன் வசித்து வந்த நிலையில், ஆடு மேய்க்கும் தோழில் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஆதிமூலம் வீட்டில் தங்கியிருந்த மருகன் நம்பிராஜனுக்கும், அவனது அத்தைக்கும் தகாத உறவு ஏற்பட்டு, இருவரும் நாள்தோறும் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். 

ஒருகட்டத்தில் இந்த கள்ளத் தொடர்பு விவகாரம்,  ஆதிமூலத்திற்குத் தெரியவந்த நிலையில், அவர் தனது மருமகனை அழைத்துக் கண்டித்துள்ளார். ஆனாலும், அவர் அத்தையுடன் உள்ள உறவைத் துண்டிக்காமல், தொடர்ந்துள்ளார்.

இதனையடுத்து, “மது குடிக்கலாம் வா” என்று தனது மருகன் நம்பிராஜனை, ஆதிமூலம் தனிமையில் அழைத்துச் சென்றுள்ளார். 

illegal contact

ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்குச் சென்றதும், இருவரும் மது அருந்தி உள்ளனர். அப்போது, தனது மனைவியுடன் உள்ள கள்ளத் தொடர்பைக் கைவிடும் படி தனது மருமகனிடம் மீண்டும் அவர் கூறி உள்ளார். இதனால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ஆதிமூலம், அருகில் கிடந்த இரும்பு கம்பியால் நம்பிராஜனை கடுமையாகத் தாக்கி உள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் சரித்த நம்பிராஜனின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து, கொலை செய்த குற்றத்திற்காக மாமன் ஆதிமூலத்தை போலீசார் கைது செய்தனர்.

illegal contact

இதனிடையே, கள்ளக் காதல் விவகாரத்தில், மருமகனை மாமனே அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.