தினமும் குடித்துவிட்டு வந்து தாய், சகோதரி, தம்பி மனைவி என்று எல்லோரையும் பலாத்காரம் செய்த காமக்கொடூரனை குடும்பமே சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மத்தியப் பிரதேசம் மாநிலம், டாட்டியா பகுதியைச் சேர்ந்த 24 வயதான சுஷில் ஜாதவ், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். 

sexual harassment

அப்போது, வீட்டில் கண்ணில் படும் தாய், சகோதரி, தம்பி மனைவி என எந்த வித்தியாசமும் தெரியாமல் தினமும் அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். 

இதனால், வெறுத்துப்போன குடும்பத்தினர், அவனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர். சம்பவத்தன்று, வழக்கம்போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த சுஷில் ஜாதவ், தனது தம்பி மனைவியைத் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்யப் போராடிக்கொண்டிருந்தார். அப்போது, அவரது தாய், சகோதரி என 3 பேரும் சேர்ந்து அவனது கழுத்தை நெறித்தும், கட்டையால் அடித்தும் அவனை அடித்தே கொன்றுள்ளனர்.

sexual harassment

இதனையடுத்து, சுஷில் ஜாதவ் உடலைத் தொலைவில் உள்ள முட்புதரில் போட்டு விட்டு வந்துள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், நடத்திய விசாரணையில், இவ்வளவு உண்மைகளும் தெரியவந்தது. 

இதனையடுத்து, சுஷில் ஜாதவை கொலை செய்த தாய், சகோதரி, தம்பி மனைவி என 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் அதிர்ச்சியும், சோகமும் ஏற்பட்டது.