தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது ஹீரோ படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

Yogi Babu and Vinay Join The Cast of SK Doctor

இதனை அடுத்து SK ப்ரொடுக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனம் தயாரிக்கும் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.சிவகார்த்திகேயனின் நீண்ட கால நண்பரும்,கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனருமான நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார்.

Yogi Babu and Vinay Join The Cast of SK Doctor

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் டிசம்பர் 6ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் வினய் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இதனை தொடர்ந்து தற்போது யோகி பாபு இந்த படத்தில் நடிக்கிறார் என்ற அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.கோலமாவு கோகிலா படத்தை தொடர்ந்து நெல்சன் படத்தில் யோகிபாபு மீண்டும் நடிக்கிறார்.