தமிழ் திரையுலகில் சீரான நடிகை வரலக்ஷ்மி. தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து அதில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் அறிமுகமானவர் இறுதியாக நீயா 2, சர்க்கார், கன்னிராசி போன்ற படங்களில் நடித்திருந்தார்.  

varalakshmi varalakshmi

தற்போது டேனி என்ற படம் மூலம் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். சந்தான மூர்த்தி இயக்கியுள்ளார். பிஜி மீடியா வொர்க்ஸ் சார்பில் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தில் வரலட்சுமியுடன் சாயாஜி ஷிண்டே, வேல ராமமூர்த்தி, அனிதா சம்பத் ஆகியோர் நடிக்கின்றனர். 

varalakshmi dani

க்ரைம் திரில்லராக உருவாகி உள்ள இப்படத்தில் வரலட்சுமி ஸ்டண்ட் காட்சிகளில் தானே ஈடுபட்டு நடித்துள்ளார். சந்தோஷ் தயாநிதி இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. வீடியோ லிங்க் கீழே உள்ளது.