தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy Vijay Bigil Telugu Deepavali Release

இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Thalapathy Vijay Bigil Telugu Deepavali Release

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Thalapathy Vijay Bigil Telugu Deepavali Release

தற்போது இந்த படம் தெலுங்கிலும் தீபாவளி அன்று வெளியாகும் என்ற அறிவிப்பை அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்டுள்ளார்.இந்த படத்தின் தெலுங்கு உரிமையை மகேஷ் எஸ் கோனேறு மற்றும் ஈஸ்ட் கோஸ்ட் ப்ரோடுக்ஷன்ஸ் இணைந்து வாங்கியுள்ளனர் என்றும் 400க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிகில் வெளியாகும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்