விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று சூப்பர் சிங்கர்.இந்த தொடரில் பங்கேற்ற பலரும் இன்று சினிமாவில் பல துறைகளில் நட்சத்திரங்களாக சாதித்து வருகின்றனர்.இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது மற்றும் நான்காவது சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சௌந்தர்யா.

தனது மயக்கும் குரலால் பல ரசிகர்களின் இதயங்களை இடம்பிடித்த இவர் சில சூப்பர்ஹிட் படங்களில் பாடல் பாடியும் அசத்தியுள்ளார்.அடுத்ததாக விஜய் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான பகல் நிலவு தொடரில் ஒரு ஹீரோயினாக நடித்து அசத்தி வந்தார் சௌந்தர்யா.

இதனை தொடர்ந்து இவர் சில குறும்படங்களில் நடித்தார் அந்த குறும்படங்கள் சமூகவலைத்தளங்களில் செம ஹிட் அடித்தன.இதனை தொடர்ந்து மாஸ்டர்,கபாலி போன்ற படங்களில் சிறு வேடங்களில் நடித்தும் அசத்தியிருப்பார் சௌந்தர்யா.

இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் சௌந்தர்யா ரசிகர்களுடன் ஏதேனும் ஒன்றை பகிர்ந்து வருவார்.தற்போது தனக்கு Acute appendicitis-க்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ரெஸ்ட் எடுத்து வருவதாக பகிர்ந்துள்ளார்.அவர் விரைவில் பூரண குணமடைய ரசிகர்கள் தங்கள் பிரார்த்தனையை தெரிவித்து வருகின்றனர்.