சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167-வது படமான தர்பார் படத்தை AR முருகதாஸ் இயக்கி வருகிறார். இதற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகிபாபு, பிரதீக், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோக்ராஜ் சிங் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கவுள்ளனர்.

darbar

ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல வருடங்களுக்குப் பிறகு ரஜினி காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்.

sriman

தற்போது படத்தில் முக்கிய ரோலில் நடித்த நடிகர் ஸ்ரீமன் கலாட்டா குழுவிற்கு அளித்த பேட்டியில் தர்பார் அனுபவம் பற்றி கூறியுள்ளார். முதன் முதலில் சூப்பர்ஸ்டாரை பார்த்தது விமானத்தில் பறப்பது போல் இருந்தது. ரஜினி சாரிடம் இதுதான் உங்களுடன் முதல் படம் என்றேன். அதற்கு அப்படியா நல்லா பண்ணுங்க என்றார். பார்ப்பதற்கு மிகவும் இளமையாக இருந்தார். எனெர்ஜியோடு இருந்தார்.