தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.தற்போது ஹீரோ படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி காத்திருக்கிறார்.KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

Sivakarthikeyan Nelson Film Titled Doctor Anirudh

இதனை தவிர தனது SK ப்ரொடுக்ஷன்ஸ் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார்.கனா,நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா,வாழ் படங்களை தொடர்ந்து இவர் தயாரிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பை நாளை வெளியிடவிருப்பதாக அறிவித்துள்ளனர்.

Sivakarthikeyan Nelson Film Titled Doctor Anirudh

Sivakarthikeyan Nelson Film Titled Doctor Anirudh

இந்த படத்தை SK ப்ரொடுக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனமும் தயாரிக்கவுள்ளனர்.சிவகார்த்திகேயனின் நீண்ட கால நண்பரும்,கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனருமான நெல்சன் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார் என்ற அறிவிப்பை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த படத்திற்கு டாக்டர் என்று பெயரிடப்பட்டுள்ளது என்றும் இந்த படத்தின் ஷூட்டிங் வரும் டிசம்பர் 6ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.