மீண்டும் இணைந்த முன்னணி சீரியல் ஜோடி ! விவரம் இதோ
By Aravind Selvam | Galatta | August 08, 2021 14:28 PM IST
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய மெகா தொடர்களில் ஒன்று திருமணம்.இந்த சேனலின் TRP ரேட்டிங் ஏறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்த தொடர். சித்தார்த் மற்றும் ஸ்ரேயா அஞ்சன் இந்த தொடரின் முதன்மை நடிகர்களாக நடித்து வந்தனர்.ரசிகர்களிடம் நல்ல ஆதரவை இந்த தொடர் பெற்றிருந்தது.
இந்த தொடரின் முதன்மை கேரக்டர்களான சந்தோஷ் மற்றும் ஜனனி ரசிகர்களிடம் அதீத வரவேற்பை பெற்றிருந்தது.இந்த இருவருக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் இந்த தொடரின் மூலம் கிடைத்துள்ளனர்.கொரோனாவை அடுத்து விறுவிறுப்பாக சென்று வந்த திருமணம் தொடர் நிறைவு பெற்றது.
இந்த தொடரின் மூலம் சித்து மற்றும் ஸ்ரேயா இடையே காதல் மலர்ந்தது விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ளவுள்ளனர்.சித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.ஸ்ரேயா அஞ்சன் விஜய் டிவியின் அன்புடன் குஷி தொடரில் தொடரின் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் மீண்டும் எப்போது சேர்ந்து நடிக்கப்போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.தற்போது இருவரும் இணைந்து குக் வித் காதல் என்ற யூடியூப் வெப் தொடரில் நடிக்கவுள்ளதை அறிவித்துள்ளனர்.இருவரையும் ஒன்றாக பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Hollywood stuntman and Jackie Chan protege Brad Allan passes away at 48
08/08/2021 04:41 PM
Yeh Hai Mohabbatein serial actress Shireen Mirza gets engaged - TRENDING PHOTOS!
08/08/2021 03:46 PM
Sivakarthikeyan's fun moments from DON shooting spot | Priyanka Mohan | Sivaangi
08/08/2021 02:26 PM